பதிவு செய்த நாள்
13
செப்
2013
10:09
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், கிழக்கு கோபுர வாசலை, மூடியது குறித்து, கோவில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. இந்த வாசலை திறந்து பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என, கோரிக்கை விடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு, கிழக்கு மற்றும் மேற்கில், இரண்டு ராஜ கோபுரங்கள் உள்ளன. கடந்த மே மாதம், இந்த கோவில் திருப்பணிகள் முடிந்து, கும்பாபிஷேகம் நடந்தது. கிழக்கு கோபுர வாசல் கதவு சிதிலமடைந்திருந்ததால், பலஆண்டுகளாக அந்த வழி மூடப்பட்டுள்ளது. இந்த வாசல் கதவை சீரமைக்க, 20 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. 28.5 அடி உயரமும், 12அடி அகலமும் கொண்ட கதவு செய்து, கடந்த ஜுன் மாதம், வாசலில் பொருத்தப்பட்டது. ஆனால், கதவை சீர் செய்த பின்னும் பயன்பாட்டுக்கு திறக்கப்படவில்லை. இது, பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அப்பகுதியை சேர்ந்த பலராமன் கூறுகையில்,கிழக்கு கோபுர வாசல் கதவு, சிதிலமடைந்து இருந்ததால் திறக்கப்படவில்லை. தற்போது, புதிய கதவு பொருத்தப்பட்டுள்ளது. ஆனாலும், வழிபாட்டுக்கு திறக்கவில்லை. இந்த வழியைத் திறந்தால், இந்த பகுதி மக்களுக்கும் வயதானவர்களுக்கும் சாமியை தரிசிக்க வசதியாக இருக்கும், என்றார். கோவில் நிர்வாக அலுவலர் தியாகராஜன் கூறுகையில், கோவில் திருவிழா காலங்களில், இந்த வாசலைத் திறந்து வைப்போம். மற்ற நாட்களில் திறந்து வைத்தால் பாதுகாப்பு இல்லை. காவல் துறை வேண்டுகோள் படியே இந்த வாசலை மூடி வைத்துள்ளோம், என்றார். கிழக்கு கோபுர வாசல் கதவு, சிதிலமடைந்து இருந்ததால் திறக்கப்படவில்லை. தற்போது, புதிய கதவு பொருத்தப்பட்டுள்ளது. ஆனாலும், வழிபாட்டுக்கு திறக்கவில்லை.