சூலூர்: கள்ளப்பாளையம் மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். சோமனூரை அடுத்த கள்ளப்பாளையத்தில் உள்ள மகா மாரியம்மன் கோவில் பழமையானது. இக்கோவிலில், சில மாதங்களாக திருப்பணிகள் நடந்தன. கணபதி பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. நான்கு கால யாக பூஜைகள் நடந்தன. நான்காம் கால யாக பூஜை முடிந்து, புனித நீர் கலசங்கள் மேளதாளத்துடன் கோவிலை வலம் வந்தன. காலை 9.00 மணிக்கு மேல் 10.00 மணிக்குள் மூலவர் மற்றும் விமானத்துக்கு கும்பாபிஷேகம் நடந்தது. அருளாளர்கள், ஆன்மிக சான்றோர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை திருப்பணிக்குழுவினர் செய்திருந்தனர்.