மதுரை : மதுரை நாகமலை புல்லூத்து சின்மயா தபோவனத்தில், விவேகானந்தர் ஜெயந்தியை முன்னிட்டு, வி.எச்.பி., உதவியுடன் இந்து மாணவர் சங்கம் சார்பில், ஆன்மிக மற்றும் ஆற்றல் கூட்டுப் பயிற்சி முகாம் நடந்தது. கோவை சாந்தினி குருத்துவ பயிற்சி கல்லூரி ஆசிரியர் சுவாமி சிவயோகானந்தா துவக்கி வைத்தார். பேராசிரியை மல்லிகா உட்பட பலர் பேசினர். இந்து மாணவர் சங்கத்தின் நரேந்திரன், முத்துப்பாண்டி, செல்லம், ஜோதி, கலைச்செல்வி ஏற்பாடு செய்தனர்.பங்கேற்றவர்களுக்கு, விவேகானந்தரின் "வரலாறும் அறிவுரையும் என்ற புத்தகங்களை, கருமாத்தூர் விவேகானந்தர் பேரவை சார்பில் சுவாமி சதாசிவானந்தா வழங்கினார்.