பதிவு செய்த நாள்
13
செப்
2013
11:09
கள்ளக்குறிச்சி: பால்ராம்பட்டில் ஒரே நாளில் 6 தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. கச்சிராயபாளையம் அடுத்த பால்ராம்பட்டில் விநாயகர், மாரியம்மன், பெருமாள், கங்கையம்மன், கருப்பன், திரவுபதி அம்மன் சுவாமிகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. 9ம் தேதி விநாயகர் வழிபாடு புன்னியாதவனம், அனுக்ஞை, எஜமான சங்கல்பம், மகா சங்கல்பம், வாஸ்து சாந்தி, அங்குரார்பனம், காப்புக்கட்டுதல், யாகசாலை பிரவேசம் நடந்தது. துவார பூஜை, சூரிய, சந்திர பூஜை, வேதிகை அர்ச்சனைக்குப் பின் யாகங்கள் நடந்தன. நேற்று முன் தினம் காலை மூலஸ்தானத்தில் உள்ள தெய்வங்களுக்கு உயிர்கலை ஏற்படுத்துதல் நிகழ்ச்சிக்குப்பின் யாத்ரா தானம் செய்து, புனித நீரூற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. ஊரணி பொங்கல் வைபவமும், வீதியுலா உற்சவமும் நடந்தது.