ஓணம், புரட்டாசி பூஜைக்காக சபரிமலை நடை செப் 14 மாலை திறப்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14செப் 2013 10:09
சபரிமலை: சபரிமலையில் ஓணம் மற்றும் புரட்டாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை செப் 14 மாலை 5.30க்கு திறக்கிறது. தந்திரி கண்டரரு மகேஸ்வரரு முன்னிலையில் மேல்சாந்தி தாமோதரன் போற்றி நடை திறந்து தீபம் ஏற்றுகிறார். வேறு எந்த விசேஷ பூஜைகளும் கிடையாது. இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். 15ம் தேதி அதிகாலை முதல் வழக்கமான நெய்யபிஷேகமும், தினசரி பூஜைகளும் நடைபெறுகின்றன. 15ம் தேதி முதல் 18ம் தேதி வரை, நான்கு நாட்கள் ஓணம் விருந்து நடைபெறுகிறது. 16ம் தேதி அய்யப்பனுக்கு திருவோண பட்டு அணிவித்து, சிறப்பு பூஜைகள் நடைபெறும். 15 முதல் 21ம் தேதி வரை, தினமும் சகஸ்ர கலச பூஜையும், இரவு படிபூஜையும் நடைபெறுகிறது. 21ம் தேதி இரவு 10:00 மணிக்கு ஹரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும். அதன் பின்னர் ஐப்பசி மாத பூஜைக்காக அக்டோபர் 16ம் தேதி மாலை 5:30 மணிக்கு சபரிமலை நடை திறக்கிறது. 17ம் தேதி அடுத்த, ஒரு ஆண்டு காலத்துக்கான மேல்சாந்தி குலுக்கல் தேர்வு நடைபெறும்.