உளுந்தூர்பேட்டை:உளுந்தூர்பேட்டை ஏரிக்கரையில் அமைந்துள்ள வேலப்பர்சாமி கோவிலில் 108 சங்காபிஷேக பூஜைகள் நடந்தன.உளுந்தூர்பேட்டை ஏரிக்கரையில் அமைந்துள்ள வேலப்பர்சுவாமி கோவில் கும்பாபிஷேகம் கடந்த ஜூலை 28ம் தேதி நடந்தது. பின், 48 நாட்களுக்கு மண்டல பூஜைகள் நடந்தது. இறுதி நாளான செப் 13 மதியம் 1 மணிக்கு யாக சாலை பூஜைகள் மற்றும் 108 சங்காபிஷேக பூஜைகள் நடந்தது. மாவட்ட தமிழ்நெடி சைவ முறை சிவனடியார் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் சண்முகம், தண்டபாணி, பழனிவேல், சின்னதம்பி செய்திருந்தனர்.