பதிவு செய்த நாள்
17
செப்
2013
10:09
திருவள்ளூர்:வேம்புலி அம்மன் கோவிலில், கடந்த, 10 நாட்களாக நடைபெற்று வந்த ஜாத்திரை திருவிழா, நிறைவு பெற்றது. இதையடுத்து, பக்தர்கள், வேப்பிலை அணிந்து, தீச் சட்டி ஏந்தி அம்மனை வழிபட்டனர். திருவள்ளூர், வேம்புலி அம்மன் கோவிலில், ஜாத்திரை திருவிழா, கடந்த, 6ம் தேதி, துவங்கியது. தொடர்ந்து, 10 நாட்கள், நடைபெற்ற விழாவில், அம்மனுக்கு பல்வேறு, அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. கடந்த, 13 மற்றும், 14ம் தேதி இரவு, கலை நிகழ்ச்சி நடைபெற்றது. நிறைவு நாளான, கடந்த, 15ம் தேதி, அம்மனுக்கு, புஷ்ப அலங்காரம் நடைபெற்று, சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அன்றிரவு, அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. நிகழ்ச்சியில், விழா குழுவினர், பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.