பதிவு செய்த நாள்
17
செப்
2013
10:09
விக்கிரவாண்டி:விக்கிரவாண்டி ஒன்றியம் தும்பூர்தாங்கல் நாகம்மன் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த தும்பூர் தாங்கல் நாகம்மன் கோவில் கருவறை கோபுரம், ராஜகோபுரம், விநாயகர், முருகன், அஷ்டலட்சுமி, தாமரை சங்கு, அயரவதம், நவக்கிரக கோவில்கள் புதுப்பித்து, கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதை முன்னிட்டு கடந்த 11 ம் தேதி யாக சாலை பூஜைகள் துவங்கின.நேற்று முன் தினம் கோவில் முன்பாக 108 பசுக்களுக்கு பூஜை செய்யப்பட்டது. நேற்று காலை 7.30 மணிக்கு யாத்ராதானம், கிரகப்பிரதி நடந்து 9 மணிக்கு கடம் புறப்பாடு நடந்தது. காலை 9.16 மணிக்கு கருவறை கோபுரத்திலுள்ள கலசத்திற்கு மயிலாடுதுறை ரவி சுவாமிநாத சிவாச்சாரியார் தலைமையில் புனித நீரை ஊற்றினர். பின்னர் ராஜகோபுரம் உட்பட அனைத்து கோவில் களுக்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு தீயணைப்பு படை வீரர்கள் புனித நீரை தெளித்தனர்.விழா ஏற்பாடுகளை திருப்பணி குழுவினர் இந்து அறநிலைய துறை தர்க்கார் சுரேஷ், செயல் அலுவலர் வெங்கட கிருஷ் ணன், அப்பாசாமி, சரவணன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க துணை செயலாளர் கார்த்திகேயன், சிவககுமார், செல்வி ராமலிங்கம், ஊராட்சித் தலைவர் ராஜாமணி, துணை தலைவர் ஜெயா, முன்னாள் அறங்காவலர் அருள் கலந்து கொண்டனர்.