திருவாடானை : திருவாடானை அருகே மல்லனூர் மாரியம்மன் கோயிலில், கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. காலை 9.45க்கு, சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க, கும்பத்தில் புனித நீர் ஊற்றபட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். திருப்புல்லாணி அருகே மேதலோடை வடக்கு கிராமத்தில் சித்திவிநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று காலை 7 மணிக்கு கோபுர கலசத்திற்கு சந்திரசேகர சாஸ்திரி தலைமையில் சிறப்பு பூஜை நடந்தது. கடம் புறப்பாடு, அதனை தொடர்ந்து வேதவிற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க காலை 9 மணிக்கு கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ராமநாதபுரத்தில் விஸ்வ பிராமண சமூகத்தாரின் காளிகாதேவி அம்மன் கோயிலில் நடந்த மகா கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கடந்த செப்., 14ல் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை நடத்தப்பட்டு விழா துவங்கியது. நேற்று நான்காம் கால யாகபூஜை, பூர்ணாகுதி, யாத்ரா தானம் நடந்தது. தொடர்ந்து யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடாகி கும்பத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. ஏற்பாடுகளை காளிகாதேவி அம்மன் கோயில் திருப்பணி மற்றும் விழா கமிட்டியினர் செய்தனர்.