Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மெய் காட்டிட்ட படலம்! நாகமெய்த படலம்! நாகமெய்த படலம்!
முதல் பக்கம் » 64 திருவிளையாடல்
மாயப் பசுவை வதைத்த படலம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

14 மார்
2011
03:03

அனந்தகுண பாண்டியன் நாகத்தைக் கொன்று பெற்ற வெற்றி, அவனது பேருக்கும் புகழுக்கும் மேலுமொரு மகுடம் சூட்டுவதாக அமைந்தது. இதன்பிற்கும் சமணர்கள் திருந்தவில்லை. தங்கள் ஆதிக்கத்தை மதுரையில் நிலைநிறுத்த எண்ணிய அவர்கள் மீண்டும் அனந்தகுண பாண்டியனுக்கு தொல்லை கொடுத்தனர். அபிசார ஹோமம் நடத்தி, இன்னொரு அரக்கனை உருவாக்க எண்ணினர். இப்போது, அவர்கள் ஒரு தந்திரத்தையும் கையாண்டனர். சைவர்கள் பசுவை புனிதமாகக் கருதுபவர்கள். அதை வழிபாடு செய்பவர்கள். அந்தப் பசுவின் மூலமே அவர்களை அழிக்க எண்ணினர் அவர்கள். ஹோமம் துவங்கியது. யாக குண்டத்தில் இருந்து அதிபயங்கர அசுரன் ஒருவன் தோன்றினான். எஜமானர்களே! உத்தரவிடுங்கள். உங்களுக்காக நான் என்ன பணி செய்ய வேண்டும்? என்றான். பசுவாசுரனே! நீ ஒரு பசுவின் வடிவெடுத்து மதுரை மக்களை அழித்து விடு. பலம் கொண்ட மட்டும் உன் கொம்புகளால் முட்டிமோதி, மாளிகைகளையும், அங்காடிகளையும், இன்னும் மதுரையின் முக்கிய இடங்களை யெல்லாம் நொறுக்கி விடு, என்றனர். பசுவாசுரனும் புறப்பட்டான். நகருக்குள் புகுந்த அவன் வானத்துக்கும் பூமிக்குமாக பெரிய பசுவாக உருவெடுத்தான். தன் கூரிய கொம்புகளை தாழ்த்திப் பிடித்து பலரைக் குத்திக் கொன்றான். இந்த தகவல் அனந்தகுண பாண்டியனுக்கு வரவே, அவன் பசுவை அடக்க எடுத்த முயற்சிகள் பலிக்கவில்லை.

எல்லாம் அந்த சொக்கலிங்கப் பெருமானுக்கு தெரியுமல்லவா? அவர் முன்னால் யார் தான் நிற்க முடியும்? அவரையே சரணடைந்தான் அவன். தன் பக்தனின் கோரிக்கைக்கு செவிசாய்த்தார் சோமசுந்தரர். அவர் தன் பாதுகாவலரும், வாகனருமான நந்தீஸ்வரரை அழைத்தார். நந்தியே! நீ உடனே ரிஷப வடிவெடுத்துச் செல். மதுரையை அழிக்க வந்துள்ள அந்த மாயப்பசுவைக் கொன்று வா, என உத்தரவிட்டார். இறைவனின் ஆணையைப் பெற்ற நந்தி, கண்டவர் எவரும் அஞ்சும் வண்ணம் சினந்து எழுந்தது. அதன் கண்கள் வேள்விக் குண்டத்தழல் போல் கொதித்தன. நாக்கு நாசினியைத் துழாவியது.  தலை வானுலகைத் தொட்டு நின்றது. வளைந்த கொம்பிலே செம்மணிப் பூண் சுற்றிக் கிடந்தது. முதுகிலே பொற்கவசம் மின்னியது. கழுத்தில் வீரமணி ஜொலித்தது. இப்படி ஆரவாரமாக  கிளம்பினார் நந்தியெம்பெருமான். தன்னையும் விண்ணளவுக்கு உயர்த்திக் கொண்டு, கொம்புகளை வீசியபடியே வேகமாக  சென்றார். மாயப்பசுவை வழிமறித்தார். இரண்டுக்கும் கடும் போர் நடந்தது. முடிவில், தன் கொம்புகளால் பசுவின் வயிற்றைக் கிழித்தார். பசு பயங்கர அலறலுடன் சாய்ந்து உயிரை விட்டு, மலை வடிவம் எடுத்தது. அதுவே பசுமலை என்ற பெயரில் இன்றளவும் மதுரையில் இருக்கிறது. இப்படியாக, அனந்தகுண பாண்டியன் சைவம் தழைக்க பல நற்பணிகளைச் செய்தான். அவனது காலத்திற்குப் பிறகு, அவனது மகன் குலபூஷண பாண்டியன் மன்னர் பொறுப்பேற்றான்.

 
மேலும் 64 திருவிளையாடல் »
பெரிய தர்மம் செய்தால் தான் இறை ஆசி கிடைக்கும் என்பதில்லை. சிறிய தொண்டு கூட கருணையைப் பெற்றுத் தரும். ... மேலும்
 
temple news
ஒரு செயலைத் தொடங்கும் முன், அந்த செயல் பற்றிய முழு விபரங்களையும் தெரிந்து வைத்துக் கொண்டால், மிகவும் ... மேலும்
 
temple news
இந்திரனின் வாகனமான ஐராவதம் அவனுக்காக காத்து நின்றது. கருடனால் பாம்பை பிடிக்க முடியும்... ஆனால், அது ... மேலும்
 
temple news
மதுரை மாநகரம் இயற்கையாக எழுந்ததல்ல. அது உருவாக்கப்பட்ட ஒரு நகரம். அதை உருவாக்கி அருளியவரும் ஆலவாய் ... மேலும்
 
temple news
குலசேகர பாண்டியன் மதுரை நகரை நிர்மாணித்ததன் பலனாக அழகான மகனையும் பெற்றான். அவனுக்கு மலையத்துவஜன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar