மகாராஷ்டிரா மாநிலம் ஷீரடியில் வாழ்ந்த மகான் சாய்பாபா. இவரது பெற்றோர், பிறந்த ஊர் யாருக்கும் தெரியாது. 1858 முதல் 1918 வரை 60 ஆண்டுகள் ஷீரடியில் வசித்தார். இவர் தங்கிய மசூதி ‘துவாரகாமாயி’ எனப்படுகிறது. அவர் பயன்படுத்திய பொருட்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள ‘துனி’ என்னும் நெருப்புக் குண்டத்தில் கிடைக்கும் சாம்பல் ‘உதி’ என்னும் பிரசாதமாக தரப்படுகிறது. அவதார தினமான ஸ்ரீராமநவமியும், சமாதி அடைந்த விஜயதசமியும் விழா நடக்கும். இவரை வழிபட்டால் கேட்ட வரம் கிடைக்கும்.