பேரூர் : பேரூர் பட்டீஸ்வரர் கோவில் நாட்டியாஞ்சலி திருவிழா செப் 20 துவங்கியது.முதலில், கோவை "சாஸ்த்ரா டெம்பிள் ஆப் டான்ஸ் குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து சென்னை ஸ்ரீதேவி நிருத்யாலயா குருவினரின் "வந்தே சம்பம் எனும் தலைப்பில் நடந்த பரதநாட்டியம் அனைவரையும் கவர்ந்தது. விழாவில், கலெக்டர் கருணாகரன் கலந்து கொண்டுபேசுகையில்,""மிகவும் தொன்மையான கலையான பரதநாட்டியக்கலையை உயிர்ப்போடு இருக்க இதுபோன்ற நிகழ்ச்சிகள் முக்கிய காரண மாக திகழ்கிறது, என்றார். கோவை ஸ்ரீ சரஸ்வதி கலாலயா குழுவினரின் "திருவெம்பாவை பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. செப் 21, மற்றும் 22 நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடக்கின்றன.