Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கதிரேசன் பெயர் விளக்கம்! மறுபிறவி என்பது நிச்சயம் ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 செப்
2013
10:09

*மனிதன் தன்னந்தனியாக இருக்க முடியாது. கடவுளின் தொடர்போடு தான் அவன் தனது வாழ்வை நடத்த முடியும். மனிதன் தன்னுயிரைப் போல பிற உயிர்களையும் நேசிக்க வேண்டும். தனக்கென மட்டும் வாழாமல் மற்றவருக்காகவும் வாழ வேண்டும். இந்த அன்பு மனம் கொண்டிருப்பதே பகுத்தறிவின் பயன்.
*விலங்குக்கும், தெய்வத்திற்கும் இடைப்பட்ட நிலையில் மனிதன் இருக்கிறான். அதனால், அன்பு, இரக்கம் போன்ற நற்குணங்களும், கபடம், பொறாமை போன்ற தீய குணங்களும் அவன் மனதில் கலந்துஇருக்கின்றன. அன்புள்ள மனதில் மட்டுமே ஆண்டவன் மகிழ்வுடன் குடியிருப்பான்.
*ஒருநாளைக்கு நான்கு மணி நேரமாவது உறங்க வேண்டும். இரவு தூங்காமல் விழித்திருந்தால் உடல்நலம் பாதிக்கும். உண்ண வேண்டிய நேரத்தில் உண்ணவும், உறங்கவேண்டிய நேரத்தில் உறங்கவும் வேண்டும்.
*மனிதன் வாழ்வில் ஏற்க வேண்டியதை ஏற்கவும், விலக்க வேண்டியதை விலக்கவும் முடியும். மனத்தெளிவு இருந்தால் இதைச் சரியாகச் செய்ய முடியும்.
*செல்வத்தை எளிதாகச் சேர்க்கலாம். ஆனால், அருட்செல்வத்தை வாழ்வில் பெறுதல் அவ்வளவு எளிதன்று. பணம் நம்மை விட்டு ஒருநாள் நீங்கி விடும். ஆனால், அருட்செல்வம் எந்நாளும் நம்மை விட்டு நீங்காது.
*மனதில் எழும் ஆசைக்கு அளவில்லை. அதனால், செய்யக் கூடாத தீயவழிகளில் சிக்கி மனிதவாழ்வு நாசமாகிறது.
*வாழ்வில் இருவிதம் உண்டு. ஒன்று உடல்வாழ்வு, மற்றொன்று உயிர்வாழ்வு. உடல்வாழ்வு உலகியலுக்காக வாழ்வது. உயிர்வாழ்வு கடவுளுக்காக வாழ்வது.
*உணவும், உணர்வும் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டவை. அழகுடன் இருக்க விரும்புபவர்கள் உணவில் பழங்களை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
*மனித உடல் இயற்கை அளித்த கோயில். உடலில் அழகு தெய்வம் குடியிருக்கிறது. அதனால், உடலைப் பேணிப் பாதுகாக்க வேண்டும்.
*அழகு என்பது வெறும் புறத்தோலிலும், நிறத்திலும் இருப்பதில்லை. நோய் நொடி இல்லாத உடலில் தான் அழகு தெய்வம் குடியிருக்கும்.
*ஒழுக்கத்தை உயிருக்கும் மேலாக மதியுங்கள். அதுவே மனிதனுக்கு சிறப்பு தருவதாகும். நல்லொழுக்கம் கொண்ட மனிதனின் அழகு அனைவரையும் கவர்ந்து விடும்.
*மனிதன் இயற்கையைச் சார்ந்து வாழ வேண்டும். நம்மைச் சுற்றியுள்ள இயற்கையான மலை, காடு, நதி போன்றவற்றை நேசித்து வாழ வேண்டும்.
*ஒழுக்கம் என்பது உடல் சார்ந்தது மட்டுமல்ல. எண்ணம், சொல், செயல் எல்லாவற்றிலும் ஒழுங்கு இருக்கவேண்டும். ஒவ்வொரு மனிதனும் ஒழுக்கத்தைப் பின்பற்றினால் வீடு மட்டுமல்ல, நாடே நலம் பெறும்.
*எல்லாச் சமயங்களும் கூறும் உண்மை ஒன்றே. இதை உணராமல் மக்கள் ஒருவருக்கொருவர் தங்களுக்குள் பகையுணர்வு கொள்கின்றனர்.
*எதுவும் திடீரென்று முளைப்பதில்லை. ஒன்றிலிருந்து ஒன்று தோன்றுவது தான் இயற்கை. மனிதப்பிறவியும் திடீரென்று ஒருநாளில் தோன்றியிருக்காது.
*உலகில் உள்ள அனைவரும் நம் சகோதரர் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொண்டால், நீதிமன்றங்கள் தேவையே இருக்காது.
-திரு வி.க

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar