பதிவு செய்த நாள்
26
செப்
2013
10:09
*இன்பம், துன்பம், வெற்றி, தோல்வி இவை அனைத்தையும் சமமாகக் கருது. வீரன்பாவியாகாமல் இருக்க அது தான் வழி. கடமையைச் செய்ய தயங்கியவனைக் கண்டு உலகம் பழிக்கும்.
*தொழில் செய்யத்தான் உனக்கு அனுமதி உண்டு. ஆனால், செய்கையின் பலனைக்கருதாதே. தொழில்செய்யாமலும் இருக்காதே.எதிலும் பற்று வைக்காதே. வருவது வரட்டும் என்றுகடமையில் கருத்தைச் செலுத்து.
*செய்யும் தொழிலைத் திறமையாகச் செய். துன்பத்தைக் கண்டு மனம் கலங்காதே. பயம், கோபத்தை அறவே விடு.மனவுறுதி மிக்கவனாக இரு.
*இயற்கையின் தூண்டுதலால் தான் உலகம் இயங்குகிறது, எல்லாத் தொழில்களும் நடக்கின்றன. ஆனால், அகந்தை கொண்ட மனிதர்கள் தாங்களால் தான், உலகம் இயங்குவதாக எண்ணி புத்தியை இழந்துவிடுகிறார்கள்.
*முழுநம்பிக்கை வைத்து, என்னையே பற்றுக்கோடாக எண்ணி உன் நெஞ்சத்தை என்னிடம் அளித்து விடு. என்னை முழுமையாகசரணடைந்து தினமும் வணங்கு. மன உறுதியுடன் என்திருவடிகளைப் பற்றியவர்களின் வாழ்வை நானே பேணிக் காப்பேன்.
*நீ எதைச் செய்தாலும் எனக்கே காணிக்கை ஆக்கிவிடு. அது உன்னுடையது என்பதை மறந்துவிடு. மனசஞ்சலம் இன்றி கடமையாற்று.
*எப்போதெல்லாம் பூமியில் தர்மம் அழிந்து அதர்மம் தலைதூக்குகிறதோ, அப்போது நான் உலகில் அவதரிப்பேன்.
*கொழுந்து விட்டு எரியும் நெருப்பு, விறகுகளைச்சாம்பலாக்குவது போல, இந்த உலகம் பொய்யானது என்ற ஞானத்தீ, முன்வினைப் பாவத்தைச் சாம்பலாக்கி விடும்.
*செய்யும் செயலை தவமாகக் கருதுபவன், நிலையான நிம்மதியை அடைவான். ஆனால், ஆசையால் உந்தப்பட்டு ஏதாவது லாபம் கிடைக்கும் என்று செய்பவன், கீழ்நிலையை அடைகிறான்.
*உடம்பு திடமாக இருக்கும்போதே, புலன்களின் உணர்ச்சி வேகத்தை தடுக்கும் சக்தி பெறு. அவனே நிறைவான மனிதன் என்னும் தகுதி பெற்றவன்.
*மனதை வசப்படுத்தியவன் தனக்கு தானே நண்பனாக இருக்கிறான். வசப்படுத்தாதவன் அவனுக்கே பகைவனாகி விடுவான்.
*எதிர்பார்ப்பு இல்லாமல் அன் பு காட்டுபவர்கள், நடுநிலையில் வாழ்பவர்கள், அனைவரையும் சமமாக கருதுபவர்களே மனிதர்களில் உத்தமமானவர்கள்.
*காற்றைக் கட்டுப்படுத்த முடியாதது போல, மனதையும் கட்டுப்படுத்த முடியாது.
*இலையோ, பூவோ, பழமோ, வெறும் தண்ணீரோ.. ஏதாவது ஒன்றை பக்தியுடன் எனக்கு படைக்கும் பக்தனின் அன்பை ஏற்றுக் கொள்கிறேன். அவன் கொடுத்த உணவைத் திருப்தியாக ஏற்கிறேன்.
-கிருஷ்ணர்