கீழக்கரை: ஏர்வாடி பாதுஷா நாயகம் தர்காவில், சந்தனக்கூடு விழா, நாளை (செப்.,29ம் தேதி) நடைபெறுகிறது. வெளி மாநில பக்தர்கள் கூட்டத்தால் ஏர்வாடி களை கட்டியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி பாதுஷா நாயகம் சந்தனக்கூடு திருவிழா, செப்.,7ல் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு நாளை நடக்கிறது. வெளியூர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளதால் ஏர்வாடி களை கட்டியுள்ளது. தடையில்லா மின்சாரம், குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்பாடுகளை கமிட்டி தலைவர் அம்சத் ஹூசைன், செயலாளர் செய்யது பாரூக் ஆலிம் அரூஸி, உபதலைவர் செய்யது சிராஜூதீன் மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.