கீழக்கரை : கீழக்கரை பழைய குத்பா பள்ளி ஜமாத் சார்பில், மஹ்தூமியா உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் மழை வேண்டி சிறப்பு தொழுகை நடந்தது. கீழக்கரை பழைய குத்பா பள்ளி ஜமாத் சார்பில் மஹ்தூமியா உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் தலைமை இமாம் ஹைதர் அலி தலைமையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை நடந்தது. மாவட்ட அரசு காஜி சலாஹூத்தீன் சிறப்பு பிரார்த்தனை செய்தார். பெண்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டது. கீழக்கரை அனைத்து ஜமாத்துகளை சேர்ந்த பிரமுகர்கள் தொழுகையில் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஜமாத் தலைவர் ஹாஜா முகைதீன் மற்றும் நிர்வாக கமிட்டியினர் செய்தனர்.