குற்றாலநாதர் கோயில் பெயர் மாற்றம் குறித்த வாடகை நிர்ணய குழு கூட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01அக் 2013 11:10
குற்றாலம் : குற்றாலநாதர் கோயிலில் பெயர் மாற்றம் செய்வதற்கான நியாய வாடகை நிர்ணய குழு கூட்டம் நடந்தது. குற்றாலநாதர் கோயிலுக்கு பாத்தியப்பட்ட சுமார் 200 கடைகள் அமைந்துள்ளன. இந்த கடைகளில் தற்போது கடை நடத்துபவர்கள் பெயரில் கடைகளை மாற்றுவதற்கு வெளிப்படையான முறையிலும், எந்தவித புகாருக்கு இடமளிக்காத வகையிலும் பெயர்மாற்ற நிர்ணய குழு கூட்டம் நடத்த வேண்டும் என இந்துசமய அறநிலையத்துறை ஆணையர், இணை ஆணையர் அறிவுறுத்தலின்படி குற்றாலத்தில் நேற்று பெயர் மாற்றம் செய்வதற்கான நியாய வாடகை நிர்ணய குழு கூட்டம் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி தலைமையில் நடந்தது. தென்காசி மாவட்ட பதிவாளர் பாலகிருஷ்ணன், உதவி கோட்ட பொறியாளர் சுப்பிரமணியன், கோயில் தக்கார் கண்ணதாசன், செயல் அலுவலர் வெங்கடேஷ், ஆகியோர் கொண்ட இந்த குழு கூட்டத்தில் 15க்கும் மேற்பட்ட வாடகைதாரர்கள் தங்களது பெயருக்கு கடைகளை பெயர் மாற்றம் செய்வதற்கான மனுக்களை அளித்தனர். வெளிப்படையாகவும், பொதுமக்கள் முன்னிலையில் நடந்த இந்த கூட்டத்தில் சிலர் மனுக்கள் அளித்துள்ள நிலையில் இதற்கான வாய்ப்பு மீண்டும் ஒருமுறை தரப்படுமெனவும் அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படுமெனவும் இந்த வாய்ப்பினால் செப்டம்பர் மாதத்தில் மட்டும் சுமார் ரூ.35 லட்சம் வாடகை பணம் வசூலாகியிருப்பதாகவும் இணை ஆணையர் அன்புமணி தெரிவித்தார்.