பதிவு செய்த நாள்
01
அக்
2013
11:10
திசையன்விளை: திசையன்விளை உலக ரட்சகர் ஆலய திருவிழா நடந்தது. திசையன்விளை உலக ரட்சகர் ஆலய திருவிழா 11 நாட்கள் நடந்தது. விழாவில் திருப்பவனி, திருப்பலி, கொடியேற்றம், ஜெபமாலை, மன்றாட்டு பள்ளி, நற்கருணை ஆசீர், ஆர்.சி., துவக்கப்பள்ளி, ஸ்டெல்லாமாரிஸ் உயர்நிலைப்பள்ளி, உலக மீட்பர் மேல்நிலைப்பள்ளி, லயோலா கல்லூரி, மறைகல்வி, மாணவ, மாணவியர் ரட்சகர் இளையோர் இயக்கம், வின்சென்ட் தே பவுல்சபை, வளனார் ஆண்கள் இயக்கம் ஆகியோரின் கலைநிகழ்ச்சி, பல்வேறு பங்குதந்தையர்கள் மறையுரை, இலவச மருத்துவ முகாம், விளையாட்டு போட்டிகள், சிறப்பு மாலை ஆராதனை, நகர வீதிகளில் நற்கருணை பவனி, சப்பரபவனி, பெருவிழா, கூட்டுத்திருப்பலி, கொடியிறக்கம், அசனவிருந்து உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. ஏற்பாடுகளை பங்குதந்தை ஜாண்பிரிட்டோ அடிகள், பங்கு மேய்ப்புபணி குழுவினர், மரியின் ஊழியர் சபை சகோதரிகள், இறைமக்கள், அன்பியங்கள் செய்திருந்தனர்.