பதிவு செய்த நாள்
01
அக்
2013
11:10
திருவேங்கடம் : கரிவலம்வந்தநல்லூர் இந்து நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட மாரியம்மன், காளியம்மன் கோயில் பூக்குழி திருவிழா இன்று (1ம்தேதி) கொடியேற்றத்துடன் துவங்கி வரும் 10ம்தேதி வரை பத்து நாட்கள் நடக்கிறது. 1ம் திருவிழா வெள்ளச்சாமிநாடார் நினைவாக காலை 5 மணியளவில் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. மதியம் அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, அன்னதானம் நடக்கிறது. இரவு பனையூர் முருகன் குழுவினரின் பேண்ட் வாத்தியத்துடன் அம்மன் சிம்ம வாகனத்தில் வீதியுலா, ராஜபாளையம் சிவபார்வதி குழுவினரின் நடன நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை மண்டகபடிதாரர்கள், கரிவலம்வந்தநல்லூர் நாடார் உறவின்முறை தலைவர் முருகன், பஞ்., உறுப்பினர் முருகேஸ்வரி, தமிழ்நாடு காவல்துறை கருப்பசாமி, லிவின் இண்டர்நெட் விக்னேஸ்வரி, லிவின் ஜூவராஜ் ஆகியோர் செய்துள்ளனர். திருவிழா நாட்களில் தினமும் பகல் 1 மணிக்கு அம்மனுக்கு பல்வேறு அபிஷேக அலங்கார தீபாராதனை நடக்கிறது. வரும் 8ம்தேதி நாடார் உறவின்முறை சார்பில் குற்றாலம் தீர்த்தம் எடுத்து வருதல், மதியம் 12 மணிக்கு அம்மனுக்கு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடக்கிறது. இரவு 7 மணிக்கு ஆயிரங்கண் பானை, முளைப்பாரி, அக்னிசட்டி, அம்மன் வீதியுலா நடக்கிறது. 9ம்தேதி நாடார் உறவின்முறை சார்பில் காலை அம்மனுக்கு அபிஷேக, அலங்கார, தீபாராதனை, பூ இறங்கும் பக்தர்களுக்கு காப்பு கட்டுதல், அம்மன் அழைப்பு, பூ வளர்த்தல், மாலை 3.30 மணிக்கு மேளதாள, வாணவேடிக்கையுடன் அம்மன் வீதியுலா தொடர்ந்து பக்தர்கள் பூ இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 7 மணிக்கு கயிறு குத்துதல், இடையன்குளம் பாலமுருகன் குழுவினரின் நையாண்டி மேளத்துடன் நெல்லை பழனி குழுவினரின் கரக ஆட்டம் நடக்கிறது. விழாவின் இறுதி நாளான வரும் 10ம்தேதி நாடார் வர்த்தகர்கள் சங்கம் சார்பில் மாலை 5 மணிக்கு அம்மனுக்கு அபிஷேக, அலங்கார, தீபாராதனை, மஞ்சள் நீராட்டு நடக்கிறது. ஏற்பாடுகளை கரிவலம்வந்தநல்லூர் இந்து நாடார் உறவின்முறையினர், விழாக்கமிட்டியினர், மண்டகபடிதாரர்கள் செய்து வருகின்றனர்.