கீழக்கரை: ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி பாதுஷா நாயகம் தர்காவில், 839ம் ஆண்டு சந்தனக்கூடு திருவிழா செப்., 7ல், மவ்லீது ஓதப்பட்டு, துவங்கியது. இதன் நிறைவு நிகழ்ச்சியாக, நேற்று தர்கா வளாகத்தில் கொடியிறக்கம் நடந்தது. இதையொட்டி, நேற்று காலை 8 மணிக்கு ஏர்வாடி குடியிருப்பில் உள்ள பழைய குத்பா பள்ளிவாசலில், மவ்லீது (புகழ்மாலை) ஓதப்பட்டு, அப்பகுதி மக்களுக்கு நெய்சாதம் பிரசாதமாக வழங்கப்பட்டது. மாலையில், தர்கா மண்டபத்தில் மாவட்ட அரசு ஹாஜி சலாஹூத்தீன் சிறப்பு பிரார்த்தனை நடத்தினார். செயலாளர் செய்யது பாரூக் ஆலிம் அரூஸி, உதவி தலைவர் செய்யது சிராஜூதீன் முன்னிலையில் தக்பீர் முழக்கத்துடன் தர்கா கமிட்டி தலைவர் அம்சத் ஹூசைன் கொடியிறக்கினார்.