குருவித்துறை: சோழவந்தான் அருகே குருவித்துறை சித்திர ரத வல்லபபெருமாள் கோயிலில் புரட்டாசி சனி உற்சவம் கொண்டாடப்பட்டது. நேற்று பூதேவி, ஸ்ரீதேவியருடன் பெருமாள் வண்ணச் சப்பரத்தில் ஆடி வீதிகளில் எழுந்தருளினார். பின் கோயில் அலங்கார மண்டபத்தில் எழுந்தருளிய சுவாமிக்கு ரங்கநாதபட்டர் பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்தார். மாவட்ட கவுன்சிலர் செல்லப்பாண்டி, யூனியன் தலைவர் அன்னக்களஞ்சியம், பேரூராட்சித் தலைவர் பாண்டியம்மாள், துணைத் தலைவர் கணேசன், நகர செயலாளர்கள் ராமச்சந்திரன், பாப்புரெட்டி பங்கேற்றனர். கோயில் நிர்வாக அதிகாரி சுமதி, ஊழியர் வெங்கடேஷன் இதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.