பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில் ராமருக்கு சிறப்பு திருமஞ்சனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07அக் 2013 11:10
புதுச்சேரி: பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில் நவராத்திரி விழாவையொட்டி, நேற்று, ராமர் மகாலட்சுமி அலங்காரத்தில் அருள்பாளித்தார். புதுச்சேரி- திண்டிவனம் மெயின் ரோட்டில் பஞ்சவடீயில் 36 அடி உயர பஞ்சமுக ஆஞ்ஜநேயர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், நவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் கடந்த 5ம் தேதி துவங்கியது. நேற்று ராமருக்கு திருமஞ்சனம் நடந்தது. பின்னர் ராமர், மகாலட்சுமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாளித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று (7ம் தேதி) ராமர், வேணுகோபாலன் அலங்காரத்தில் அருள்பாளிக்கிறார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பஞ்சமுக ஜெயமாருதி சேவா டிரஸ்டியினர் மற்றும் அறங்காவல் குழு செயலாளர் நரசிம்மன் செய்திருந்தனர்.