மதுரை பொற்றாமரைக் குளத்தின் மேற்கு கரையில், ஊஞ்சல் மண்டபத்தின் எதிரில் உள்ள மண்டபம் பெயர் சூட்டும் மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. கி.பி. 1563-ல் செட்டியப்ப நாயக்கர் என்பவரால் கட்டப்பட்ட இம்மண்டபத்தில் வைத்து, குழந்தைகளுக்கு பாலூட்டி, பெயர் சூட்டினால் அவர்களது வாழ்வு சிறக்கும் என்கிறார்கள். இம்மண்டபத்தில் ஆண், பெண் குழந்தைகளின் நட்சத்திரத்திற்கு ஏற்ப அவர்களுக்குச் சூட்ட வேண்டிய பெயரின் முதல் எழுத்துகளும், பெயர்களும் குறிப்பிடப்பட்டு உள்ளது.