செஞ்சி :செஞ்சி கிருஷ்ணர் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. செஞ்சி சிறுகடம் பூர் ராதா, ருக்மணி சமேத கிருஷ்ணர் கோவிலில் புரட்டாசி நான்காவது சனிக்கிழமை உற்சவம் நேற்று முன்தினம் நடந்தது. இதை முன்னிட்டு ராதா, ருக்மணி, கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை சாமி வீதி உலா நடந்தது. இரவு 7 மணிக்கு ஊஞ்சல் உற்சவமும், சிறப்பு தீபாராதனையும் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாத விநியோகம் செய்தனர். இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.