பதிவு செய்த நாள்
14
அக்
2013
10:10
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் இன்று திருபவித்ரோத்ஸவம் துவங்குகிறது. கள்ளக்குறிச்சி புண்டரீகவள்ளி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. இதில் திருபவித்ரோத்சவ வழிபாடு இன்று துவங்குகிறது. தொடர்ந்து 5 நாள் நடைபெறும் வழிபாட்டில் பகவத் அனுக்ஞை, ஆச்சார்யவர்ணம், மிருத்சங்கிரகனம், அங்குரார்பனம், வாஸ்துசாந்தி பவித்ர பிரதிஷ்டை, வேத திவ்ய பிரபந்த தொடக்கம், பிரதான ஹோமம், பூர்ணாஹூதி, சாற்றுமுறை, யாகசாலை ஹோமங்கள் நடக்கிறது. வரும் 18ம் தேதி காலை 8:00 மணிக்கு சிறப்பு அலங்கார திருமஞ்சனம் நடத்தி, மஹா பூர்ணாஹூதி, பெருமாள் ஆஸ்தானம் எழுந்தருள, பிரம்மகோஷம், சாற்றுமுறை வழிபாடுகள் நடக்கிறது. வழிபாடுகளை தேசிக பட்டர் செய்து வைக்கிறார்.