பதிவு செய்த நாள்
15
அக்
2013
10:10
ஆர்.கே.பேட்டை : சக்தி அம்மன் கோவிலில், நேற்று முன்தினம், நவராத்திரி விழா நிறைவடைந்தது. இதில், அம்மன், வெண்ணெய் அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஆர்.கே.பேட்டை அடுத்த, விடியங்காடு கிராமத்தில், சக்தி அம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த ஒன்பது நாட்களாக, அம்மன், கெஜலட்சுமி, தனலட்சுமி, அன்னலட்சுமி, தானியலட்சுமி உள்ளிட்ட பல்வேறு அலங்காரத்தில், வீதியுலா வந்து அருள்பாலித்தார். தினமும், காலையில், அம்மனுக்கு அபிஷேகமும், அதை தொடர்ந்து, சிறப்பு பூஜை நடந்தது. மாலையில், அம்மன் வீதியுலா நடந்தது. நேற்று முன்தினம், மூலவர் அம்மனுக்கு, வெண்ணெய் அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து, குத்து விளக்கு பூஜை நடந்தது. நேற்று, விஜயதசமி அன்று, அம்மன், சரஸ்வதி அலங்காரத்தில் அருள்பாலித்தார்.