விழுப்புரம்: நவராத்திரி விழாவை முன்னிட்டு பெண் குழந்தைகளை சரஸ்வதி உள்ளிட்ட தெய்வங்களாக அலங்காரம் செய்து வழிபட்டனர். விழுப்புரம் புதுத்தெரு மாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. இக்கோவிலில் நேற்று முன் தினம், ஆயுத பூஜையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் 9 பெண் குழந்தைகளை துர்க்கை, சரஸ்வதி, லட்சுமி உள்ளிட்ட தெய்வங்களாக அலங்காரம் செய்து, பெண்கள் வழிபட்டனர்.பின் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கோவில் அர்ச்சகர் சரவணன் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.