மதுரை: மதுரை ஐராவதநல்லூர் தூய அந்தோணியார் ஆலய விழா நடந்தது.முதன்மை குரு ஜோசப்செல்வராஜ் தலைமை வகித்தார். பாதிரியார்கள் ஆனந்தம், அந்தோணிராஜ், பங்கு தந்தை ஜான்திரவியம் இணைந்து கூட்டு திருப்பலியை நடத்தினர். ஆலயத்தில் 1100 ஆண்டுகளாக நடக்கும் நவநாள் சிறப்பு ஜீபிலி நவநாளாக கொண்டாடப்பட்டது. விழா நிறைவில் தேவ இன்னிசை பாடல்களுடன் அந்தோணியார் சப்பரம் ஊர்வலம் நடந்தது. பொங்கல், அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பங்கு தந்தை ஜான்திரவியம், பங்கு பேரவை உறுப்பினர்கள் செய்தனர்.