Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஐஸ்கிரீம் பிரசாதம்! சக்தி வாய்ந்த பரிகார சுலோகம்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
விதவிதமாய் தட்சிணாமூர்த்தி!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 அக்
2013
12:10

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகிலுள்ள கைலாசநாதர் கோயிலில் 14 சீடர்களுடன் தட்சிணாமூர்த்தி காட்சி தருகிறார். இவரை வழிபட்டால் கல்வியில் சிறந்து விளங்கலாம்.

கடலூர் மாவட்டம் திருக்கோபுரத்திலுள்ள மங்களபுரீஸ்வரர் ஆலயத்தில் தட்சிணாமூர்த்தி இசை வடிவமாக உள்ளார். இவரது சிலையைத் தட்டினால் சப்தஸ்வரங்கள் எழுவதால், இசைப்பயிற்சி மாணவர்கள் இவருக்கு சிறப்பு வழிபாடு செய்கிறார்கள்.

சிதம்பரத்துக்குத் தென் கிழக்கில் 8 கி.மீ தொலைவிலுள்ள மேலைத் திருக்கழிப்பாலை தலத்தில் அமைந்துள்ள தட்சிணாமூர்த்தி காசியிலிருந்து கொண்டுவரப்பட்ட பளிங்குக்கல்லால் உருவானவர்.

திருவையாறு ஐயாறப்பன் கோயிலில் கபாலமும், சூலமும் ஏந்தியவராக தட்சிணாமூர்த்தி காட்சியளிக்கிறார். இவர் காலடியின்கீழ் ஆமை போன்ற உருவம் காணப்படுகிறது. இதுபோன்ற அமைப்பை வேறெந்தக் கோயிலிலும் காணமுடிகிறது.

தேப்பெருமாநல்லூரில் உள்ள அன்னதான தட்சிணாமூர்த்தி, தன்னை பூஜித்த கார்க்கோடகன் முதலான பாம்புகள், மற்ற விலங்குகளான சிங்கம், வேங்கை தவிர நந்தி முதலானோர் கூடியிருக்க அற்புதமாகக் காட்சி தருகிறார்.

செங்கல்பட்டு அருகிலுள்ள அகரம் கோவிந்த வாடியில் தனிக்கோயில் கொண்டு விளங்குகிறார் தட்சிணாமூர்த்தி இங்கு சித்திரையில் நடக்கும் திருவிழாவின்போது அவருக்கு விபூதிக் காவடி எடுத்து வழிபடுகின்றனர். பின்னர் அந்த விபூதியையே சுவாமிக்கு அபிஷேகம் செய்து பிரசாதமாகத் தருகின்றனர். இதை நீரில் கரைத்துக் குடித்தால் நோய்கள் நீங்குவதாக நம்பிக்கை.

கடலூர் அருகிலுள்ள தீர்த்தனகிரி சிவக்கொழுந்தீஸ்வரர் கோயிலில் இரண்டு கால்களையும் மடக்கி பீடத்தின் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தரும் தட்சிணாமூர்த்திக்கு கீழே முயலகன் இல்லை. 4 சீடர்கள் மட்டுமே உள்ளனர். விவசாயத் தம்பதியருக்கு அருள் செய்வதற்காக முதியவர் வேடத்தில் இங்கு வந்த சிவபெருமான், அவர்கள் படைத்த உணவை இரண்டு கால்களையும் மடக்கி வயலில் அமர்ந்து சாப்பிட்டுச் சென்றாராம். இதனடிப்படையில் தட்சிணாமூர்த்தி இக்கோலத்திலிருப்பதாகச் சொல்கின்றனர். தவ தட்சிணாமூர்த்தி என அழைக்கப்படும் இவரிடம் வேண்டிக்கொண்டால் உணவிற்குப் பஞ்சமில்லா கற்படும். விவசாயம் செழிக்கும் என்பது நம்பிக்கை.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar