பதிவு செய்த நாள்
18
அக்
2013
11:10
பவானி: பவானி மார்க்கெட் படித்துறையில் அமைந்துள்ள, சக்தி விநாயகர் கோவிலில் பாலஸ்தாபன விழா நடந்தது. பவானி தினசரி காய்கனி மார்க்கெட் எதிரில், காவிரி ஆற்று படித்துறையில் உள்ள சக்தி விநாயகர், ஸ்ரீஐயப்பன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கடந்த, 1983ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதனை தொடர்ந்து, பல ஆண்டுகளுக்கு பின் நேற்று காலை, 10 மணிக்கு, கணபதி பூஜையுடன் துவங்கிய விழாவில், பகல், 12.25 மணிக்கு வாஸ்து சாந்தி, கலாகர்கணம், யாகசாலை பூஜை உட்பட பல பூஜையுடன் பாலஸ்தாபன விழா முடிந்து, மஹா தீபாராதனை நடந்தது. ஏற்பாடுகளை கோவில் திருப்பணி குழுவினர்கள் பிரபாத் சங்கமேஸ்வரன், பிரபாத் மகேந்திரன், அக்னி ராஜா, பசுபதி ராஜா, ஜெகநாதன், பொன்ராஜ் மற்றும் பலர் செய்திருந்தனர். தவிர, ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணராஜ், தி.மு.க., நகர செயலாளர் நாகராசன், ஸ்தபதி ரமேஷ், சந்திரசேகரன் உட்பட பலர் பங்கேற்றனர். மணிகண்ட குருக்கள் தலைமையில், பாலஸ்தாபன விழா பூஜைகள் நடந்தது.