சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே மேலையூர் அய்யாபட்டி பதினெட்டாம்படி கருப்பர்கோயிலில் அன்னதான பூஜை விழா நடந்தது. மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. கொள்ளுகுடிப்பட்டி, வேட்டங்குடிப்பட்டி, மேலையூர் அய்யாபட்டி கிராமத்தினர் பங்கேற்றனர். விழாவில், 2 ஆயிரம் கிலோ அரிசி, ஆயிரம் கிலோ காயக்கறிகளை கொண்டு சமையல் செய்தனர். மலைபோல் குவித்து வைக்கப்பட்ட அன்னத்திற்கு சாமியாடி தீபாராதனை செய்தவுடன் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். எஸ். எஸ்.,கோட்டை, முறையூர், மு.சூரக்குடி கிராமத்தினர் பங்கேற்றனர்.