லோக மாதர்களாக இருக்கப்பட்ட தெய்வங்களைக் குழந்தையாக வரச் சொன்னதில் நிரம்ப விசேஷம் இருக்கிறது. குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே என்கிறோம். தெய்வமே குழந்தையாக வந்தால் ரொம்பக் கொண்டாட்டமாகும். குழந்தைக்கு நம்மைப்போல் காமமும் குரோதமும் துக்கமும் வேரூன்றி இருப்பதில்லை. நாம் தான் உணர்ச்சிகளை ஆழ உள்வாங்கிக்கொண்டு மனதை கெடுத்துக் கொள்கிறோம். உணர்ச்சிகள் வேறூன்றாமல் குழந்தைபோல் நாமும் ஆனந்தமாக இருக்க வேண்டும். இதனால்தான் உபநிஷதம்மும் குழந்தையாய் இரு என்கிறது.