பதிவு செய்த நாள்
23
அக்
2013
10:10
ஸ்ரீவைகுண்டம்: ஆழ்வார்திருநகரில் வேதாந்த தேசிகரின் 745 திருநட்சத்திர உற்சவம் நடந்தது.ஆழ்வார்திருநகரி ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகளின் ஆசிரமம் சார்பில் நடந்த உற்சவத்தில் உற்சவருக்கு சிறப்பு திருமஞ்சனம், சிறப்பு திருவராதனம், ஆழ்வார் அருளி செயல்கள் பாராயணம் நடந்தது. திருவோணத்தன்று காலை ஞான தேசிகர் வீதிவலமாக ஆதிநாதர் ஆழ்வார் கோயிலுக்கு எழுந்தருளினர். பின்னர் சடாரி மரியாதை நடந்தது. மாலையில் திருவாய் மொழி பாராயணம் நிறைவு மற்றும் கோஷ்டி நடந்தது. விழாவில் பக்தர்கள் ரங்கநாத பாதுகர் நாட்டேரி ராஜகோபாலச்சாரியார் சுவாமி, சென்னை ஆசிரம நிர்வாகி சுந்தரராஜன், சந்தாணம், ராகவன், ராமபத்திரன், திருமலாச்சார்யர், சீனிவாசன், முத்தப்பன், சடகோபராமானுஜம், தெய்வசிலை, ஸ்ரீனிவாசன், ரெங்கன் சேவுகிரி, திருவேபங்கடத்தான் ஆசிரம் டிரஸ்டி குங்குமம் ஸ்ரீனிவாசன், நிர்வாகி ஸ்ரீனிவாச தாத்தம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.