தூத்துக்குடி: தென்திருப்பேரை கைலாசநாதர் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது. தென்திருப்பேரை கைலாசநாதர் கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு திருவிளக்கு பூஜையை நல்லாசிரியர் தர்மலிங்கம், திருநெல்வேலி இஎஸ்ஐ கார்ப்பரேசன் நிர்வாக கண்காணிப்பாளர் முத்துராமலிங்கம் ஆகியோர் துவக்கி வைத்தனர். பூஜையையொட்டி கைலாசநாதர்ருக்க சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தது. நிகழ்ச்சியில் பெருமாள், செல்வம், திரவியகுமாரன், இசக்கிமுத்து, கணபதி, நயினார், முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.