Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பெண்கள் மணியடித்துப் பூஜை ... திருவிழா காலத்தில் கொடிமரத்தில் ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பிரதோஷ மாமா!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 அக்
2013
12:10

திருவருளாகிய தெய்வ அருள் இருந்தாலும், குருவருள் இருந்தால் தான் அது முழுமை பெறும். அத்தகைய குருவருளைப் பெற்ற பாக்கியவானே பிரதோஷ மாமா.இவர் கவிக்குஞ்சரம் என்று பெரியவரால் பாராட்டப்பட்ட வைத்தியநாத சர்மாவின் புதல்வர். நிஜப்பெயர் வெங்கடராமன். ஸ்டேஷன் மாஸ்டராக பணி செய்தவர். இவரது மனைவி மாதுஸ்ரீ வேதாம்பாள். ஒருமுறை, திருவண்ணாமலை கிரிவலம் சென்ற போது திண்ணைசாமி என்ற சித்தர், இவரிடம் காஞ்சிபுரம் சங்கரமடம் போ, என்று சொன்னார். இதையடுத்து இவர் திருவான்மியூரிலும், காளஹஸ்தியிலும் முகாமிட்டிருந்த பெரியவரைத் தரிசிக்கும் பேறு பெற்றார். காளஹஸ்தியில் அவரைத் தள்ளி நின்று தரிசித்த போது,எனக்கு மனசே இல்லாத நிலை வேண்டும், என்று பிரார்த்தித்தார். அப்போது பெரியவர் அவரை அழைத்தார். தானே கிடைக்கும், என்று அருள்பாலித்தார். தன் மனதில் நினைத்தது பெரியவருக்கு எப்படி புரிந்தது என்று வெங்கடராமனுக்கு ஆச்சரியம்! அதன்பின், பெரியவரின் தீவிர பக்தராகி விட்டார்.இதன்பின் பணிக்காக சேலம் வந்த இவர், பிரதோஷ நாட்களில் காஞ்சி சென்று பெரியவரைத் தரிசித்து வந்தார். மூன்று பிரதோஷம் தான் சென்றிருப்பார்... அடுத்த பிரதோஷத்தன்று பெரியவரே, பிரதோஷம் வந்திருக்காரா? என்று அடைமொழியிட்டு கேட்கத் துவங்கி விட்டார். அன்று முதல், பக்தர்கள் அவரை பிரதோஷ மாமா என அழைக்கத் துவங்கினர்.அதோடு விட்டாரா! பிரதோஷ காலங்களில் பெரியவர் வடமாநிலங்களுக்கு சென்று விட்டால், அங்கேயும் போய் விடாமல் தரிசித்து வந்தார். தன் உத்தியோகம் பற்றி அவர் கவலைப்படவே இல்லை. பெரியவரைத் தவிர வேறு தெய்வமில்லை என்ற நிலைக்கு வந்து விட்டார். பிரதோஷ மாமா ஓய்வு பெற்ற போது, பி.எப். பிராவிடண்ட் பண்ட் அதிகம் இல்லை. காரணம், பெரியவர் ஜெயந்தி விழா நடத்தியே பெரும் பணத்தை செலவிட்டிருந்தார். ஓய்வுக்குப் பிறகு உன்னை யார் வச்சுக்கப் போறா? என்று கேட்டார் பெரியவர்.பிரதோஷ மாமா அமைதியாக நின்றார். உன்னை நானே வச்சுக்கறேன், என்று சொல்லி, அவரைத் தன்னோடு ஐக்கிய மாக்கிக் கொண்டதை உணர்த்தினார். அத்துடன், காஞ்சியிலேயே வசிக்க ஒரு வீட்டையும் வழங்கினார். ஒருநாள் அவரது வீட்டுக்கு சென்றும் விட்டார். மடத்தில் கைங்கர்யம் செய்பவர்களை, அவரது வீட்டுக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் அனுப்பி, அங்கே தீப பூஜை நடத்த ஏற்பாடு செய்தார். இப்போதும் அந்த பூஜை நடக்கிறது. அடுத்து, இருதயநோயால் பாதிக்கப்பட்ட மாமாவைக் காப்பாற்றிய பெரியவர், நீ திரும்பி வந்ததே பெரிசு என்று திருவாய் மலர்ந்தருளினார்.தனது திருப்பாதத்தை மூன்று முறை அவரது சிரசில் வைத்து ஆசியளித்தார். மாமா குடியிருந்த வீட்டை, என்பேரிலும் அவர் பேரிலும் எழுதி வெச்சிடு என்று சொன்னதன் படி, அவர்கள் காலத்திற்குப் பிறகு பெரியவருக்கும், மாமாவுக்கும் அங்கே சந்நிதிகள் அமைந்தன. உலகில் முதன்முதலாக மகாபெரியவருக்கு அமைந்த திருக்கோயில் இதுவே. அதிருத்ர மகாஹோமத்தை பெரியவர் நான்கு முறை நடத்தியுள்ளார். அந்த நான்கிலும் கலந்து கொண்ட பாக்கியம், பிரதோஷ மாமாவிற்கு உண்டு. பிரதோஷ மாமா கணக்கே இல்லாத அளவுக்கு முட்டி தேய அங்கப்பிரதட்சணம் செய்துள்ளார். கடும் சிவராத்திரி விரதம், மழை, புயல், வெள்ளத்திலும் அயராத ஆன்மிகப்பணி, நட்ட நடுநிசியில் பாதயாத்திரை செய்துள்ளார். பெரியவரைத் தவிர வேறு எது பற்றியும் பேசாத நாவு பெற்றிருந்தார். இத்தனை சிறப்பம்சங்களைப் பெற்ற இவரை 64வது நாயன்மார் என்று மகாபெரியவரே, தன் திருவாக்கால் அங்கீகரித்தார். அத்துடன், போப் ஜான்பாலுக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த பெரிய புராண ஆங்கில மொழிபெயர்ப்பு புத்தகத்தை பிரதோஷ மாமாவுக்கு கொடுத்தருளினார்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar