நல்லது என்று ஒன்று இருந்தால் கெட்டது என்றும் ஒன்று இருக்கும். ஆண், பெண், இருள், ஒளி என எல்லாமே இரண்டிரண்டாக இருப்பது போல் நம் உடலிலும் வலப்பாகம், இடப்பாகம் என இரு பிரிவுகள் உண்டு. வலம் என்பது இயல்பாகவே நல்லதைச் செய்வது, ஆலயத்தை வலமாகச் சுற்றி வருகிறோம். பூமி வலமாகச் சுற்றுகிறது. இயற்கை நியதிகளுடன் இணைந்து வாழ்ந்து புகுந்த வீட்டிற்கு மங்களத்தைச் செய்யவே வலக்காலை முன் வைத்து மணப்பெண் நுழைகிறாள்.