பதிவு செய்த நாள்
23
அக்
2013
05:10
பரவை: பரவை முத்துநாயகியம்மன் கோயில் புரட்டாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று இரவு 10 மணியளவில் பூசாரி திரவியம் வைகை ஆற்றில் கொடியை சுமந்து கோயில் வர, பின்னர் கோயில் கம்பத்ததில் கொடியேற்றப்பட்டது. கோயில் நாட்டாண்மை மனோகரன் முன்னிலையில் அம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. பேரூராட்சி தலைவர் சி.ராஜா, கிராமகமிட்டி நிர்வாகிகள் நாகமலை, ஆர்.கே.ஜெயராமன், பாலசுப்பிரமணியம், சவுந்திரபாண்டியன், முருகையா உட்பட பக்தர்கள் பங்கேற்றனர். அக்.24 முதல் 9 நாட்களில் இரவு 6 மணிக்கு பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதிஉலா நடக்கும். அக்.29 ல் மாலை 6 மணிக்கு கிராமியபாடல் புகழ் பரவை முனியம்மா தலைமையில் அக்கினிச்சட்டி, முளைப்பாரி எடுத்தல், மறுநாள் காலை 9 மணிக்கு பொங்கல், குதிரைஎடுப்பு, பால்குடம் விழா, நவ.1ல் இரவு 9 மணக்கு பூப்பல்லக்கு விழா, நவ.2ல் மாலை 3 மணிக்கு அம்மன் பூ ரததத்தில் எழுந்தருளி,மஞ்சள்நீராட்டுவிழா நடக்கிறது. ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்துள்ளனர்.