காஞ்சிபுரம்: தீபாவளியையொட்டி வரதராஜ பெருமாளுக்கு, சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. நான்கு வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், தீபாவளியையொட்டி, நேற்று முன்தினம் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சியளித்தனர். ஏராளமான பக்தர்கள் வரதராஜ பெருமாளை தரிசிக்க கோவிலில் குவிந்திருந்தனர். நான்கு வீதிகள் வழியாக பல்லக்கில் சென்ற வரதராஜ பெருமாள், மீண்டும் கோவிலை வந்தடைந்தார். வழிநெடுகில் காத்திருந்த பக்தர்கள், சுவாமியை பரவசத்துடன் வழிபட்டனர்.