ராமநாதபுரம்: ராமநாதபுரம் வழிவிடு முருகன், குண்டுக்கரை முருகன், தேவிபட்டினம் அருகே தெற்கு பெருவயல் ரணபலி முருகன், மண்டபம் காந்தி நகர், ரயில்வே ஸ்டேஷன் முருகன் உட்பட மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் கந்த சஷ்டி விழா நடந்து வருகிறது. தினமும் இரவு ஆன்மிக சொற்பொழிவு, பாராயணம் நடக்கிறது. நவ.,8 காலை 10 மணிக்கு வண்ண பாராயணம், இரவு 7.30 மணிக்கு சூரசம்ஹாரம், 9ம் தேதி காலை 11 மணிக்கு மேல் திருக்கல்யாணம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் கமிட்டி, விழாக்குழுவினர் செய்துள்ளனர்.