திருமுருகன்பூண்டி கோவிலில் கந்தர் சஷ்டி விழா துவங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05நவ 2013 11:11
அவிநாசி: திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவிலில், ஸ்ரீகந்தர் சஷ்டி விழா, காப்பு கட்டுதலுடன் துவங்கியது. ஸ்ரீசண்முகநாதருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப் பட்டு, மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடு, பூஜை கள் நடந்தன. முன்ன தாக, முருகப் பெருமானுக்கு வைரவேல் வைத்து சிறப்பு பாராயணம், பூஜை நடந்தன. கோவில் செயல் அலுவலர் சரவணபவன், தக்கார் வெற்றிச்செல்வன் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர். வரும் 8ம் தேதி சுவாமி வீதியுலா, 9ம் தேதி திருக்கல்யாண உற்சவம் ஆகியன நடக்கின்றன. தினமும் காலை 11.00 மணிக்கு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக பூஜை நடக்கும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதேபோல், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலிலும் கந்தர் சஷ்டி விழா நடந்து வருகிறது.