பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரத் திருவிழா துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05நவ 2013 11:11
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கந்தர் சஷ்டி, சூரசம்ஹாரத் திருவிழா வரும் 8ம் தேதி நடைபெறுகிறது. பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கந்தர் சஷ்டி, சூரசம்ஹாரத்திருவிழா நேற்றுமுன்தினம் காலை 10:00 மணிக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. விழாவையொட்டி, நேற்று சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் உள்ளிட்ட பூஜைகள் நடந்தது. வரும் 7ம் தேதி வரை நான்கு கால அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது. வரும் 7ம் தேதி மாலை 6:00 மணிக்கு வேல் வாங்கும் உற்சவமும்; 8ம் தேதி மாலை 3:00 மணி முதல் சூரசம்ஹாரமும், 9ம் தேதி காலை 10:00 மணிக்கு மகா அபிஷேகமும், மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும் நடைபெறுகிறது. 10ம் தேதி மாலை 6:00 மணிக்கு திருஊஞ்சல் உற்சவ பூர்த்தி விழா நடைபெறுகிறது. விழாவையொட்டி, 7ம் தேதி வரை தினசரி மாலை 6:00 மணிக்கு கந்தபுராண தொடர் சொற்பொழிவு நடைபெறுகிறது. வால்பாறை வால்பாறை சுப்பிர மணிய சுவாமி கோவிலில் முதன் முறையாக, இந்த ஆண்டு கந்தர்சஷ்டி விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. காலை 8.00 மணிக்கு கணபதிஹோமத்துடன் உற்சவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் காலை 12.15 மணிக்கு முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் வள்ளிக்கண்ணு தலைமையில் திருக்கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து நடைபெறும் விழாவில் வரும் 8ம் தேதி மாலை சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.