பதிவு செய்த நாள்
06
நவ
2013
11:11
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் ராஜகோபுர தொன்மை பற்றி திருக்கழுக்குன்றம் பள்ளி மாணவர்கள் ஐந்து பேர் ஆய்வு செய்து வருகின்றனர். திருக்கழுக்குன்றத்தில் பக்தவத்சலேஸ்வரர் கோவில், பல்லவர், சோழர், விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்டு நான்கு திசைகளிலும் ராஜகோபுரங்களுடன் அமைந்துள்ளது. இக்கோவிலின் வடதிசையில் அமைந்துள்ள ராஜகோபுரத்தைப் பற்றி, திருக்கழுக்குன்றம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சுரேஷ், லட்சுமிபதி, முருகன், வெங்கடேசன், ஞானசேகரன் ஆகியோர் ஆய்வு செய்து வருகின்றனர். மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை நடத்தும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில், இது தொடர்பாக அவர்கள் கட்டுரை சமர்ப்பிப்பார்கள். இதுபற்றி ஆய்வு மாணவர் முருகன் கூறுகையில், தொன்மைச் சின்னங்களை பாதுகாப்பதும், பராமரிப்பதும் அவற் றில் உள்ள அறிவியல் தொழில்நுட்பங்களை அறிந்து அடுத்த தலைமுறையினர் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதே இத்தகைய ஆய்வு பணியின் நோக்கம், என்றார்.