மயிலம்: மயிலம் பகுதி கோவில்களில் உலக நன்மைக்காக சிறப்பு வழிபாடு நடந்தது.மயிலம் அடுத்த கீழ் எடையாளம் மலையில் பகவதியம்மன் கோவிலில் பெண்கள் கேதார கவுரி விரதமிருந்து அம்மனுக்கு படைத்தனர். கோவில் பூசாரி முனுசாமி குருக்கள் உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் சிறப்பு வழிபாடு நடத்தினார்.மயிலம் மயிலியம்மன், மலையடிவாரத்திலுள்ள காளி கோவில், கொல்லியங்குணம் விநாயகர், மோழியனூர் அக்கரகாளியம்மன் கோவில்களில் கிராம பெண்கள் நோம்பு பொருட்களை வைத்து வழிபாடு நடத்தினர்.