பதிவு செய்த நாள்
07
நவ
2013
10:11
வத்திராயிருப்பு : கூமாப்பட்டி பகுதி முத்தாலம்மன் கோயில் தேரோட்ட விழா, இயல் இசை நாடக விழாவுடன் துவங்கியது. இவ்விழா,ஒவ்வொரு ஆண்டும் மழைவேண்டி. மக்களால் நடத்தப்படுகிறது. முதல்நாள் இரவில் தோன்றும் அம்மன். மறுநாள் இரவுக்குள் மறைந்து விடும். ஒருநாள் மட்டும் அம்மன் உருவமாக இருந்து, அலங்காரத் தேரில் வீதியுலா வந்து. பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அதுவே தேரோட்ட விழாவாக. அப்பகுதி மக்களால் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு விழா, நேற்று இயல், இசை, நாடக விழாவுடன் துவங்கியது. நாதஸ்வரக்கச்சேரி, நாட்டுப்புற தெம்மாங்கு கலைநிகழ்ச்சி நடந்தது. நவ., 13 ல் தேரோட்டம் நடக்க உள்ளது. ஏற்பாடுகளை ஆசிரியர், அரசுப்பணியாளர், ஓய்வு பெற்றோர் நற்பணி மன்ற தலைவர் ஜெயபால், செயலாளர் அன்னச்சாமி, பொருளாளர் அண்ணாமலை செய்துள்ளனர்.