ஏனாம்: பாரம்பரிய விழாவான, "நாகுல சவேதி விழா, ஏனாமில் நேற்று கொண்டாடப்பட்டது. நாகுல சவேதி விழாவை முன்னிட்டு, ஏனாம்வாசிகள் தங்கள் குடும்பத்துடன், வயல்கள் மற்றும் தோட்டங்களுக்கு நேற்று காலை சென்றனர். அங்குள்ள, பாம்பு புற்றுகளில் பால், முட்டை, வாழைப்பழம் போன்றவற்றை வைத்து, மலர்களை தூவி பூஜை செய்து, பாம்புகளை வழிபட்டனர்.