பதிவு செய்த நாள்
08
நவ
2013
11:11
சேலம்: சேலம் கருப்பூர் இஸ்கான் கோவிலில், கோவர்த்தன பூஜை நடந்தது. இந்திரனால் ஏற்படுத்தப்பட்ட பலத்த மழையில் இருந்து, பக்தர்களை பாதுகாக்க, கோவர்த்தன கிரியை, கிருஷ்ணன் இடது கை சுண்டு விரல் நுனியில் தூக்கிய லீலை, கோவர்தன பூஜையாக கொண்டாடப்படுகிறது. சேலம் கருப்பூரில் உள்ள இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோவில் வளாகத்தில், கோவர்தன பூஜை நடந்தது. இதில், கோவர்த்தன மலையை போல், அன்னத்தாலும், பல்வேறு பழங்களாலும், மலர்களாலும் அலங்கரித்து பூஜை செய்யப்பட்டது. நவம்பர், 4ம் தேதி காலை, 6 மணிக்கு ஆரத்தி மற்றும் பஜனையுடன் தொடங்கி, கோ பூஜை, அபிஷேகம், கோவர்த்தன லீலா மற்றும் கோவர்த்தன பூஜை நடந்தது. பிரம்மாண்டமான நிகழ்ச்சியில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு, ஸ்வாமி அருள் பெற்றுச்சென்றனர்.