செஞ்சி: ஆலம்பூண்டி சுப்பிரமணியர் கோவிலில் இன்று சூரசம்ஹார விழா நடக்கிறது. செஞ்சி தாலுகா ஆலம்பூண்டி வள்ளி, தேவ சேனா சமேத சுப்பிரமணியர் கோவிலில் கடந்த 3ம் தேதி முதல் கந்த சஷ்டி விழா நடந்து வருகிறது. முதல் நாள் பார்வதி திருமணம், மறுநாள் முருகப்பெருமான் தோற்றமும், 5ம் தேதி தாருகன் வதம் நடந்தது. 6ம் நாள் விழாவாக நாளை மாலை 5 மணிக்கு சூரசம்ஹாரமும், இரவு 10 மணிக்கு கந்தபுரணம் நாடகம் நடக்கிறது. 9ம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. செஞ்சி கிருஷ்ணாபுரம் சுந்தர விநாயகர் கோவிலில் கந்த சஷ்டி விழா 3ம் தேதி துவங்கியது. முதல் நாள் திருமுருகன் தோற்றம், இரண்டாம் நாள் தந்தைக்கு உபதேசம், 6ம் தேதி தாருகன் வதம், நேற்று சிங்கமுகன் வதம், இன்று வேல்வாங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை (9ம் தேதி) காலை 10 மணிக்கு 108 சங்காபிஷேகம், மாலை 6 மணிக்கு சூரசம்ஹார பெரு விழா, 10ம் தேதி இரவு 7 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.