மயிலாடுதுறையில் ஐப்பசி மாதத்தில் நடைபெறும் துலா உற்சவ விழாவை முன்னிட்டு, அருள்மிகு அபயாம்பிகை உடனுறை மாயூரநாதர் கோவிலில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றன திருக்கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, தினந்தோறும் மயூரநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடுகளும், சுவாமி புறப்பாடும் நடைபெற்று வருகிறது. இவ்விழாவின் முக்கிய 10 நாள் நிகழ்வுகளில் ஒன்றான திருக்கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, காலை 7.30 மணிக்கு மர ரதத்தில் விநாயகர், சந்திரசேகரசுவாமி, அருள்மிகு சண்டிகேஸ்வர் சுவாமி புறப்பாடும், காவிரியில் தீர்த்தம் கொடுத்தருளல் நிகழ்ச்சியும், பின்னர் நண்பகல் 12 மணிக்கு மாயூரநாதர் கோவிலில் திருக்கொடியேற்றம் நடைபெற்றது.