கும்பகோணம் செüராஷ்டிரா தர்ம பரிபாலன கமிட்டியின் ஆதீனத்திற்குட்பட்ட குமரன் தெருவில் உள்ள திருக்குடந்தை திருப்பதி எனப்படும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடாஜலபதி கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று கோயில் முகப்பில் புதிதாக மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. குடமுழுக்கையொட்டி கடந்த 5-ம் தேதி பூர்வாங்க பூஜை தொடங்கியது. தொடர்ந்து 6-ம் தேதி காலை காவிரி ஆற்றிலிருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டு, யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. பின்னர் வியாழக்கிழமை காலை விஸ்வரூபம், கும்ப மண்டல பிம்பாகனி சதுஸ்தான பூஜை நடைபெற்றது. தொடர்ந்து கடங்கள் புறப்பட்டு காலை 9.30-க்கு குடமுழுக்கு நடைபெற்று, தீபாராதனை, பிரசாதம் வழங்கப்பட்டது.