ஆர்.எஸ்.மங்கலம்: கைலாசநாதர் ஆலயத்தில் உள்ள முருகன் சன்னதியில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷே ஆதாரனைகள் செய்ப்பட்டு முருகனுக்கு வள்ளி,தெய்வாணையுடன் திருக்கல்யாணம் நடைபெற்றது.திருக்கல்யாண நிகழ்ச்சியை சிவாச்சாரியார்கள் ரவிக்குமார்,அரிகிருஷ்ணன் ஆகியோர் நேற்று காலை 11 மணிக்கு நடத்திவைத்தனர்.பின்பு திருமணக்கோலத்தில் வள்ளி,தெய்வாணையுடன் முருகன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவில் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.